மலிவு விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பாரத் 5 இன்பினிட்டி எடிஷன் மற்றும் பாரத் 4 தீபாவளி எடிஷன் மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஜியோ நிறுவனம் சார்பாக குறிப்பிட்ட டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது.

பாரத் 5 இன்பினிட்டி எடிஷன்:
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு
இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பாரத் 5 இன்பினிட்டி எடிஷன் சேமிப்பு:
பாரத் 5 இன்பினிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது,பின்பு 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும்
எல்இடி பிளாஷ் வசதி கொண்டுள்ளது பாரத் 5 இன்பினிட்டி எடிஷன்.

பாரத் 4 தீபாவளி எடிஷன்:
மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்..

பாரத் 4 தீபாவளி எடிஷன் சேமிப்பு:
பாரத் 4 தீபாவளி எடிஷன் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 5எம்பி ரியர் கேமரா மற்றும் 3எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் வசதி கொண்டுள்ளது இந்த
பாரத் 4 தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications