அறிமுகம் : மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களான பாரத் 3 மற்றும் பாரத் 4.!

Written By:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் பாரத் 3 மற்றும் பாரத் 4 என்ற இரண்டு மலிவு விலை 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முறை யே ரூ.4,499/- மற்றும் ரூ.4,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் நிறுவனத்தின் 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்களின் பிரிவின்கீழ் நேற்று தொடங்கி நாட்டின் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கின்றது.

அறிமுகம் : மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களான பாரத் 3 மற்றும் பாரத் 4.!

இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பொறுத்தமட்டில், இரண்டு சாதனங்களுமே 22 இந்திய மொழிகளின் ஆதரவு கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்ட் 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 3 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், டூயல் சிம் ஆதரவு, 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் டிஸ்ப்ளே,1ஜிபி ரேம், மீடியா டெக் எம்டி6737எம் எஸ்ஓசி, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கொண்ட இந்த தொலைபேசி 2000எம்ஏஎச் அகற்றக்கூடிய பேட்டரி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி ஆகிய அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

அறிமுகம் : மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களான பாரத் 3 மற்றும் பாரத் 4.!

மறுகையில் உள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 4 அம்சங்களை பொறுத்தமட்டில், டூயல் சிம் ஆதரவு, 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்) டிஸ்ப்ளே, 1ஜிபி ரேம், மீடியா டெக் எம்டி6737 எஸ்ஓஇ, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு, 2500எம்ஏஎச் அகற்றக்கூடிய பேட்டரி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி ஆகிய அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.English summary
Micromax Bharat 3, Bharat 4 Affordable 4G VoLTE Smartphones Launched in India: Price, Specifications. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot