விற்பனையில் மிரட்டும் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 : நாமும் ஒன்னு வாங்கலாமா.?

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனமானது தொடங்கிய 50 நாட்களுக்குள் அரை மில்லியன் பாரத் 2 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. பாரத் 2 ஸ்மார்ட்போனின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி வோல்ட் போன்களில் விற்பனையாளராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும், மைக்ரோமேக்ஸ் அதன் விநியோக வலைப்பின்னல்களுக்காக 35,000 முதல் 60,000 நிலையங்களை நாடெங்கும் பலப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் அதன் பாரத் தொடரில் இன்னொரு ஸ்மார்ட்போனிலும் வேலை செய்து வருகிறது, அது பாரத் 1 என்று அழைக்கப்படுகிறது.

சரி வரப்போகும் கருவி ஒருபக்கம் இருக்கட்டும், சந்தையை கலக்கி கொண்டிருக்கும் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா.? அதன் அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.?

மலிவு 4ஜி வோல்ட்

மலிவு 4ஜி வோல்ட்

பாரத் 2 கருவியானதுஆனது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு மலிவு 4ஜி வோல்ட் செயல்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனாக நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலி

செயலி

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ரூ.3,499/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் எஸ்சி9832 செயலி மூலம் இயங்குகிறது.

4ஜிபி

4ஜிபி

512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி அளவிலான விரிவாக்கக்கூடிய சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை ஏமாற்றி நீட்டிப்பு ஆதரவும் இக்கருவியில் இணைக்கப்பட்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

அண்ட்ராய்டு மார்ஷல்லோவை கோட்னு இயங்கும் இந்த மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ஆனது 2எம்பி பின்புற கேமரா மற்றும் 0.3எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒரு 1300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் பாரத் 2 ஆனது 4 அங்குல டபுள்யூவிஜிஏ டிஸ்பிளே கொண்டுள்ளது .

தரம் மற்றும் உருவாக்கம்

தரம் மற்றும் உருவாக்கம்

இதன் தரம் மற்றும் உருவாக்கம் வாடிக்கையாளர்கள் மிகவும் ஈர்க்கிறது. 4ஜி எல்டிஇ அம்சத்திற்காக பாரத் 2 சாதனம் பாராட்டப்படுகிறது. ஜியோவின் மலிவு விலை 4ஜி சாதனங்கள் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் பெருமளவில் வெளியான அதே காலகட்டத்தில் தான் இக்கருவி வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரி

பேட்டரி

ரூ.3,500/- என்ற விலைப்புள்ளியில் கிடைக்கும் சிறந்த டிஸ்பிளே அளவு ஸ்மார்ட்போனாய் இது திகழ்கிறது. அதுமட்டுமின்றி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயனர்களை இலக்காய் கொண்டு இக்கருவியை வெளியிட்டுள்ளது. இதன் 1300எம்ஏஎச் பேட்டரி ஒரு நாள் முழுவதும் தொலைபேசி சராசரி செயல்பாட்டில் நிலைத்திருக்க வைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax Bharat 2 : One of the cheapest smartphones with 4G & VoLTE support. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X