ரூ.1,999/-க்கு வோல்ட் அம்சம் கொண்ட பாரத் 1 போன்.!
இந்த கருவியுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மலிவு விலையிலான பாரத் 2 ஸ்மார்ட்போனும் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் இந்திய மொபைல் உற்பத்தியாளர் நிறுவனங்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு முக்கியமான நிலையை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாரத் 1 வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை விளம்பரப்படுத்தியிருந்தது.
இப்போது பார்த் 1 கருவியை மிக விரைவில் அதாவது அடுத்த 4 வாரத்திற்குள் வெளியிட மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது. வெறும் ரூ.1,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை பார்த்தால்..

வோல்ட் அம்சம்
அடுத்த நான்கு வாரங்களில் சந்தையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாரத் 1 கருவியின் மிக முக்கியமான அம்சமாக நிறுவனத்தின் மலிவான வோல்ட் செயல்படுத்தப்பட்ட அம்சம் என்பது திகழ்கிறது அதாவது இந்த கருவி 4ஜி வோல்ட் ஆதரவு வழங்கும்.

விரைவில்
இந்த சாதனம் ஒரு ஜாவா அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்கலாம். இந்த கருவியுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மலிவு விலையிலான பாரத் 2 ஸ்மார்ட்போனும் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான பாரத் 2 சார்ந்த தகவலின் கீழ் இந்த சாதனத்தின் விலைநிர்ணயமானது ரூ.2,999 தொடங்கி ரூ.3,499/-க்குள் எதிர்பார்க்கலாம்.

டிஸ்ப்ளே
பாரத் 2 கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் டபுள்யூவிஜிஏ (800 x 480 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் ஒரு பாலிகார்பனேட் அமைப்பு கொண்ட 4 அங்குல டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. உடன் இந்த் ஸ்மார்ட்போன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு அதரவும் வழங்கும்.

ஆண்ட்ராய்டு
அத்துடன் 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க சேமிப்பு இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மூலம் இயக்கப்படும் உடன் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்கும்.

பேட்டரி
மேலும் எல்இடி ப்ளாஷ் உடனான 2-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 0.3-மெகாபிக்சல் (விஜிஏ தீர்மானம்) முன்பக்க கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு 1300எம்ஏஎச் லி-அயன் (நீக்கக்கூடிய) பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. தவிர, இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.0, வைஃபை-802.11 பி/ஜி/என், வைஃபை ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

மேலும் படிக்க
சாம்சங் கேலக்ஸி S8: இதுவரை இல்லாத மிகச்சிறந்த டிஸ்ப்ளே.!


Click it and Unblock the Notifications
