அட! குரல் பதிவு வசதியில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

By Super
|

அட! குரல் பதிவு வசதியில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய சூப்பர்போன் ஏ-80 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக நேற்று அறிவித்துள்ளது.

நம் நாட்டின் கடந்த நிதியாண்டிற்கான மொபைல்போன் தயாரிப்பு வருவாய் மதிப்பீட்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 1,978 கோடி வருவாயை கொடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அது மட்டுமல்லாது 6.3 சதவிகிதம் மார்கெட் பங்குகளை கொடுத்துள்ளது.

இந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது புதிதாக சூப்பர்போன் ஏ-80 என்ற ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி உள்ளது. 9.525 செ. மீ தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது. இதனால் சிறந்த தொழில் நுட்பத்தின் உதவியையும் பெற முடியும்.

பொதுவாக ஸ்மார்ட்போன் என்றால் ஒரு சிம் கார்டு வசதியினை பயன்படுத்துவது போல தான் இருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரினை வழங்கும். சிறந்த பிராசஸரை ஒரு ஸ்மார்ட்போன் கொண்டிருந்தது என்றால் அந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளமும் சிறப்பான இயக்கத்தினை கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு முக்கிய சிறப்பினை கூற வேண்டும் என்றால் இதன் பேட்டரியினை சொல்லலாம். இதில் 2,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் ஏ-80 ஸ்மார்ட்போன் சிறந்த புகைப்படத்தினையும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்க 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டது. இதோடு முடியாமல் வீடியோ காலிங் வசதிக்கு இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜி தொழில் நுட்பத்தினை பெறுவதற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். மெமரி பற்றியும் யோசிக்க வேண்டாம். இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

குரல் வழி சேவையை வழங்கும் ஆயிஷா என்ற புதிய ட்டூல்ஸின் வசதியும் கொடுக்கப்பட்டு்ள்ளது. அதாவது இதை வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி பற்றி தெளிவாக பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்த ஆயிஷா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஐபோனில் உள்ள சிரி அப்ளிக்கேஷன் வசதி போன்றது. ஏதேனும் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு இந்த ஸ்மார்ட்போனிடம் இருந்து பதில் கிடைக்கும்.

உதாரணத்திற்கு இப்போதைய தட்ப வெட்ப நிலை என்ன? என்று கேட்டால் குளிர்ச்சியாக உள்ளது அல்லது வெப்பமாக உள்ளது என்ற

பதிலை கொடுக்கிறது. இது போன்ற பல வசதிகளைகளை குரல் வழி பதிவுகளை வைத்து புரிந்துகொண்டு சேவையை வழங்கும் தன்மையையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸின் இந்த சூப்பர்போன் ஏ-80 ஸ்மார்ட்போன் ரூ. 8,490 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X