Home
Mobile

மைக்ரோமேக்ஸ் புதிய மொபைல் எக்சேஞ்ச் திட்டம்

By Super
மைக்ரோமேக்ஸ் புதிய மொபைல் எக்சேஞ்ச் திட்டம்
பொதுவாக மொபைல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை அவ்வளவு பிரமாதமாக இருப்பதில்லை. மொபைல்களை வாங்கும்போது 1 அல்லது ஒன்றைரை வருடங்களுக்கு வாரண்டி கொடுக்கின்றனர். அதற்கு அடுத்து அவர்கள் வாடிக்கையாளர் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

அதை போக்குவதற்காக நோக்கியா நிறுவனம் தனது ஒரு சில குறிப்பிட்ட மொபைல்களுக்கு மற்றும் எக்சேஞ்ச் வசதியை அளித்தது. ஆனால் மற்ற நிறுவனங்கள் அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதைப் போக்குவதற்காகவே மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய ரீஜார்ஜ் பாலிஸி என்ற புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

அதன் படி மொபைலில் ஏதாவது குறை இருந்தால் வாங்கிய 7 நாள்களுக்கும் அதைத் திரும்ப கொடுத்து வேறு மொபைலை மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைக் கொடுக்கும். அதே நேரத்தில் அது அவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும்.

இந்த திட்டம் மைக்ரோமேக்ஸின் வர்த்தக இயக்குநர் திரு. விக்காஸ் ஜெயின் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைபாடு மிகுந்த மொபைலை கொடுத்துவிட்டு புதிய மொபைலைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

மைக்ரோமாக்ஸின் வாடிக்கையாளர் சேவை தரமானதாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது. அதை நீக்கும் விதமாக மைக்ரோமாக்ஸ் நிறுவனம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த புதிய சேவையைத் தொடங்கி இருக்கிறது. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் சேவையை வலுப்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

மேலும் வருங்காலத்தில் வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்க பல நல்ல திட்டங்களையும் வைத்திருக்கிறது. அதற்காக மைக்ரோமைக்ஸ் நிறுவனம் 1860 500 8286 என்ற டோல்ப்ரீ எண்ணை வழங்கியிருக்கிறது. இந்த எண்ணை அழைத்து வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை எடுத்துச் சொல்லலாம். மேலும் தொழில் நுட்ப ரீதியான குறைபாடுகளை அறிய 011 44770000 என்ற எண்ணை அழைக்கலாம்.

பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் சாதாரணமாக பரிசோதனை செய்வது மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதில் மட்டும் முடிந்து விடும். மொபைலில் ஏதாவது சாப்ட்வேர் பிரச்சினைகள் வந்தால் நாம் வெகு தூரத்தில் உள்ள வாடிக்கையாளர் மையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.

அந்த பிரச்சினைகளை சரி செய்ய பல மாதங்கள் கூட ஆகலாம். அதனால் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தின் மீதி சலிப்பு அடைந்த விடுகின்றனர். மேலும் தரமான வாடிக்கையாளர் சேவையை அளிக்கும் நிறுவனங்களை நாட ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் இப்போது எல்லா மொபைல் தயாரிப்பாளர்களும் தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்க தொடங்கி விட்டனர். அதைத் தொடர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க நாமும் வாழ்த்துவோம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X