மைக்ரோமேக்ஸ் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை வழங்கும். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன், மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போனையும் விட சற்று பெரிய திரையை வழங்கும். கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினை கொடுக்கும்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் ஒரு முக்கிய சிறப்பென்வென்றால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் தான். இந்த ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை பெறலாம். இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் ஏ-90 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன்கள் டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும். புகைப்பட பிரியர்கள் முக்கியம் எதிர்பார்ப்பது கேமராவை தான்.
அந்த வகையில் ஏ-90 மற்றும் கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன்கள் டியூவல் கேமரா வசதியினை வழங்கும். இதன் மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெறலாம்.
மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் வீஜிஏ முகப்பு கேமராவினை கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது.
4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போனின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.
மைக்ரோமேக்ஸ் ஏ-80 ஸ்மார்ட்போனிலும் மெமரி வசதியை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் 1,600 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 174 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரியினை கொடுக்கும். மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போன் ரூ. 12,990 விலையிலும், சாம்சங் கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர தெரியவரவில்லை.


Click it and Unblock the Notifications