மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் சிறந்த ஒப்பீடு!

Posted By: Staff
மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் சிறந்த ஒப்பீடு!
குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டை பற்றி இங்கே பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ் ஏ-87 சூப்பர்ஃபோன் நின்ஜா-4 மற்றும் இன்டெக்ஸ் அக்குவா 4.0 போன்ற ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறந்த ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மைக்ரோமேக்ஸின் நின்ஜா-4 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இன்டெக்ஸ் அக்குவா 4.0 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டதாகும். இந்த திரையில் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் டியூவல் சிம் வசதி கொண்டவையாக இருக்கும்.

அக்குவா 4.0 ஸ்மார்ட்போன் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை அளிக்கிறது. மைக்ரோமேக்ஸ் நின்ஜா-4 ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவினை மட்டும் பெற முடியும். இதில் வீடியோகால் வசதி செய்ய முகப்பு கேமரா ஏதும் கொடுக்கப்படவில்லை.

இன்டெக்ஸ் அக்குவா ஸ்மார்ட்போன் 131 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும். ஆனால் ஏ-87 நின்ஜா-4 ஸ்மார்ட்போனில் இன்டர்னல் மெமரி வசதி ஏதும் கொடுக்கப்படவில்லை. இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3ஜி, ப்ளூடூத் மற்றும் வைபை நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை எளிதாக பயன்படுத்தாலம். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 1,400 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினையும் வழங்கும்.

இதனால் இன்டெக்ஸ் அக்குவா ஸ்மார்ட்போனில் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 175 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். மைக்ரோமேக்ஸ் நின்ஜா-4 ஸ்மார்ட்போன் 3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 140 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். ஏ-87 ஸ்மார்ட்போன் நின்ஜா-4 ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலையினையும், இன்டெக்ஸ் அக்குவா 4.0 ஸ்மார்ட்போன் ரூ. 5,490 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்