Home
Mobile

ரூ.5,000 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

By Super

ரூ.5,000 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!
சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ-50 சூப்பர்போன் என்ற பெயர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது.

7.9 செ.மீ. திரை வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த துல்லியத்தினை பெற முடியும். ஆம்! 1600 X 1200 பிக்ஸல் திரை துல்லியம் கொண்டது. பார்ப்பவர்களின் கண்களை கவரும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், கவர்ச்சசிகரமான தோற்றத்தினையும் கொண்டது.

இந்த ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொள்ளவதற்கு வசதியாக இருக்கும். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் 110 கிராம் எடை கொண்டது. வடிவமைப்பை பற்றி தெரிந்த கொள்ளும் போது நிச்சயம் இதன் தொழில் நுட்பத்தினையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங சிஸடத்தினை வழங்கும். 650 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் அதி வேகத்தில் செயல்படும்.

ஏ-50 சூப்பர்போனில் டியூவல் கேமரா வசதி இல்லை. ஆனால் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினை இன்னும் அழகாக பெற முடியும்.

முக்கியமான தகவல்களை ஸ்டோர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது இதில் உள்ள 32 ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி வசதி சிறப்பாக கை கொடுக்கும்.

வேண்டிய பொழுது பிரவுசிங் வசதியினை பெற, ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்களும் உள்ளது. 3ஜி மீது இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் மோகம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்மார்ட்போன் என்றாலே அதில் 3ஜி வசதி இருக்கிறதா என்று யோசிக்கறார்கள்? இந்த ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் வசதியும் உள்ளது.

இதன் 1,200 எம்ஏஎச் பேட்டரி 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். குறைந்த விலை கொண்ட இந்த ஏ-50 சூப்பர்போன், விலையிலும் சூப்பர் தான். இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,000 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X