Home
Mobile

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

By Karthikeyan
குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் டூவல் சிம் வசதி கொண்ட ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த போனிற்கு எ25 ஸ்மார்ட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்டி போன் 2.8 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருவதால் இந்த போன் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

மேலும் இந்த போன் பின்பக்கம் 1.3 எம்பி பிக்ஸ்டு போக்கஸ் கேமராவையும் கொண்டிருக்கிறது. அதோடு ஹூக்கப் இன்ஸ்டன் என்ற ஒரு மெசேஜிங் அப்ளிகேசனையும் கொண்டிருக்கிறது.

இந்த போனில் 256எம்பி ரேம் மற்றும் 512எம்பி மெமரி ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் 2ஜி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவையும் உள்ளன.

மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் எப்எம் ரேடியோவும் இந்த போனில் உண்டு. இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. இவ்வாறு ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் இந்த போன் ரூ.3,999க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X