மைக்ரோமேக்ஸ் ஏ-110 கேன்வாஸ்-2 மற்றும் கார்பன் ஏ-9+ ஒப்பீடு!
மைக்ரோமேக்ஸ் ஏ-110 கேன்வாஸ்-2 மற்றும் கார்பன் ஏ-9+ ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் நிறைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளாம் .
மைக்ரோமேக்ஸ் ஏ-110 கேன்வாஸ்-2, அடிப்படையில் ஃபேப்லட் வடிவமைப்பினை கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். இதில் 5 இஞ்ச் திரை வசதியின் மூலம் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை சிறப்பாக வழங்குவதாக இருக்கும். இதில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
கார்பன் ஏ-9+ ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் தொடுதிரையினை அளிக்கும். இதில் டபிள்யூவிஜிஏ 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரினை வழங்கும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் குவால்காம் ஸ்கார்பியன் பிராசஸரை அளி்க்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால் கேரமாவினை பொருத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன்களில் சிறு ஒற்றுமை இருக்கிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினை சிறப்பாக பெறலாம். இதனால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங்
வசதியினை வழங்கும் என்று நிச்சயம் நம்பலாம். ஏ-110 கேன்வாஸ்-2 போனில் 0.3 விஜிஏ முகப்பு கேமராவினையும், ஏ-9+ ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் வீடியோ காலிங் வசதியினையும் பெற முடியும்.
இந்த கேன்வாஸ்-2 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்த முடியும் என்றால், ஏ-9+ ஸ்மார்ட்போனில் 2 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை சிறப்பாக பயன்படுத்த முடியும். இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்
சிறப்பாக சப்போர்ட் செய்யும்.
ஏ-110 கேன்வாஸ்-2 ஸ்மார்ட்போனில் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியில் 5 மணி நேரம் டாக் டைமும், 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும். ஏ-9+ ஸ்மார்ட்போனில் 1,420 எம்ஏஎச் பேட்டரியினை பயன்படுத்த முடியும்.
கார்பன் ஏ-9+ ஸ்மார்ட்போன் ரூ. 9,290 விலையிலும், மைக்ரோமேக்ஸ் ஏ-110 கேன்வாஸ்-2 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டரில் ரூ. 11,999 விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications