மைக்ரோமேக்ஸ் ஏ-110 ஸ்மார்ட்போன் இப்போது ஆன்லைனில்!
சமீபத்தில் தான் அறிமுகமான மைக்ரோமேக்ஸ் ஏ-110 ஃபேப்லட், ஆன்லைன் வலைத்தளங்களில் அறிமுகமாகிறது. இந்த ஃபேப்லட் சிறப்பான 5 இஞ்ச் திரை வசதியினை வழங்குவதாக இருக்கும். டேப்லட்டிற்கும் மற்றும்
ஸ்மார்ட்போனிற்கும் இடைப்பட்ட வடிவமான ஏ-110 கேன்வாஸ்-2 ஃபேப்லட் அகன்ற திரையில் சிறப்பான தகவல்களை வழங்கும்.
இந்த 5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஃபேப்லட் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்துடன், 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரில் இயங்கும்.
இதனால் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் செயல்பாடுகளையும் பெறலாம். இந்த ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை இந்த ஃபேப்லட்டில் பெறலாம். 4 ஜிபி வரை இந்த ஃபேப்லட்டில் 512 எம்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியினையும் பெறலாம்.
இந்த ஃபேப்லட் 3ஜி, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில் நுட்ப வசதிகளுக்கு சிறப்பாக ஒத்துழைக்கும். யூஎஸ்பி மற்றும் வைபை நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு இந்த ஃபேப்லட் வழங்கும். 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். நீடித்து உழைக்கும் ஆற்றலுக்கு இதன் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும்.
இத்தகைய சிறந்த வசதிகளை வழங்கும் இந்த ஃபேப்லட் ரூ. 9,999 விலையில் ஆன்லைன் வலைத்தளங்களில் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியினை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications
