மி சூப்பர் சேல்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனம் மி சூப்பர் சேல் எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த சிறப்பு சலுகை வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகை மி.காம் வலைதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 7:
சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 2ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். பின்பு 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை 8,499-விலையில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட் 7எஸ்:
சியோமி நிறுவனத்தின ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி 7 ப்ரோ:
சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும், பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும்

ரெட்மி வ்யை3:
சியோமி நிறுவனத்தின் 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் கிடைக்கும்.

சியோமி மி ஏ2:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையில் வாங்க முடியும். மேலும் விலைகுறைக்ப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி 6(3ஜிபி ரேம்)- விலை ரூ.6,999/-
ரெட்மி 6 ப்ரோ(4ஜிபி ரேம்)- விலை ரூ.8,999/-
ரெட்மி 7ஏ (2ஜிபி ரேம்)-விலை ரூ.5,999/-


Click it and Unblock the Notifications