நீங்கள் எதிர்பார்த்த சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நீங்கள் அதிகம் எதிர்பார்த்த சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி பிளிப்கார்ட், அமேசான், மி.காம் போன்ற வலைத்தளங்களில் குறைந்த விலையில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5-வது ஆண்டு விழா
குறிப்பாக சியோமி நிறுவனத்தின் 5-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே பல்வேறு மக்களுக்கும் இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 7:
சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி வ்யை3:
சியோமி ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரட்மி வ்யை3 ஸ்மார்ட்போனை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி மி ஏ2:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6ஏ:
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,199-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6:
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 7எஸ், போகோ எப்1, போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் குறிப்பிட்ட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட் டிவி:
சியோமி நிறுவனத்தின் 32-இன்ச், 43-இனச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஜீலை 25-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.


Click it and Unblock the Notifications