விரைவில் இநதியாவில் அறிமுகமாகும் சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்.!
சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சியோமி மி நோட் 10 லைட் சாதனத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் முழுவிவரங்களையும் பார்ப்போம்.

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.47-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரை விகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ரீடர் வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டுள்ளது சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0,என்எப்சி, ஜிபிஎஸ், டூயல் ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 5260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,490-/
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,575-/


Click it and Unblock the Notifications