பெசல்-லெஸ் டிஸ்பிளே & கைரேகை சென்சார் வசதிடன் வெளிவரும் மி மிக்ஸ் 2எஸ்.!
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் விரைவில் புதிய அம்சங்களுடன் மி மிக்ஸ் 2எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வீடியோ போன்றவை வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மி மிக்ஸ் 2எஸ் சாதனத்தின் பின்புறம் இரட்டை கேமரா வசதி மற்றும் அசத்தலான செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

செங்குத்தாக அடுக்கப்பட்ட இரட்டை கேமரா:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் பின்புறம் செங்குத்தாக அடுக்கப்பட்ட இரட்டை கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு மற்றும் ஆட்டோமேஷன் எச்டிஆர்இ ஆப்ஜெக்டிவ் டிராக்கிங் போன்ற மற்ற கேமரா அம்சங்களையும் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பெசல்-லெஸ்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.01-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவின் இட நகர்வை எதிர்பார்க்கலாம் அது சிறந்த பாடி-டூ-ஸ்க்ரீன் விகிதத்தை உறுதி செய்யும்.

சேமிப்பு:
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம்.

ஸ்னாப்டிராகன் 845:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3400எம்ஏஎச்:
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.அதன்பின்பு வரும் மார்ச் மாதம் 27-ம் தேதி மி மிக்ஸ் 2எஸ் வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








