அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!
4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று முதல் ஜீன் 30-ம் தேதி வரை மி டேஸ் சேல் எனும் தலைப்பில் குறிப்பிட்ட சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி 10சதவிகிதம் கேஷ்பேக்
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் வலைதளத்தில் சியோமி ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் உடனடி 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்போம்.

சியோமி மி ஏ2:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி வ்யை2:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2,500-விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ:
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ சாதனத்திற்கு ரூ.2,500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி
மெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ மாடலக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்:
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலைகுறைப்பு சலுகையில் சியோமி நிறவனத்தின் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடலுக்கு ரூ.300 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.1499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications