அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது சியோமி மி ஏ3 எனும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சிசி9இ என்ற பெயரில் சீனாவில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம்
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான புகைப்படங்களை வழங்கும் திறன்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் அனைத்து இடங்களுக்கு இந்த தரமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே வசதி:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல் 6.08-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560x720 பிக்சல்திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நல்ல சிப்செட் வசதி:
இந்த மி ஏ3 ஸ்;மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம் சிப்செட் உடன் அட்ரினேப 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளதால் இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்:
மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை
நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள்அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார், டூயல் 4ஜி, வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி. டைப்-சி போர்ட் போன் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு மற்றும் விலை:
இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.19,225-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.21,540-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications