Home
Mobile

பட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது, இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அதிமான விலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது,

பட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.!

அதற்கு போட்டியாக பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனம் தனது மி ஏ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின்
விற்பனை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அமேசான், மி.காம் போன்ற வலைத்தளங்களில் தொடங்கும்.

வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது

வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறவனம்,பின்பு ரெட்மி நோட் 7 தொடர் மாடல்களை விட உயர் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் டூயல் சிம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துளளது.

சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை

சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

48எம்பி பிரைமரி சென்சார்:

48எம்பி பிரைமரி சென்சார்:

சியோமி மி ஏ3 சாதனத்தில் 48எம்பி பிரைமரி சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது, எனவே புகைப்படங்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும். பின்பு உங்கள் வீட்டின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டே படம் பிடித்து, அதை அருமையாக பிரிண்ட் செய்ய முடியும். மேலும் இந்த சாதனத்தில் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது, இது வீடியோக்களை மிக அருமையாக எடுக்க உதவும்.

32எம்பி செல்பீ கேமரா:

32எம்பி செல்பீ கேமரா:

சரியாக பட்ஜெட் விலையில் இவ்வளவு அருமையாக கேமராக்களுடன் வெளிவந்த ஒரே ஸ்மார்ட்போன் சியோமி மி ஏ3 மட்டும் தான், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறும் 32எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, எனவே இது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். பின்பு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான பேட்டரி வசதி:

அருமையான பேட்டரி வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இது 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது, குறிப்பாக 36மணி நேரம் வரை பேட்டரி பேக்அப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிங் ஆதரவு:

கேமிங் ஆதரவு:

சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேமிங் செயலிகளைப் பயன்படுத்த முடியும், அதிலும் பப்ஜி போன்ற கேமிங்-க்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த மென்பொருள் அம்சங்களைகொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக வாங்கச் சிறந்தது.

கண்டிப்பாக வாங்கச் சிறந்தது.

பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக வாங்கச் சிறந்தது என்பது முக்கிய கருத்து. பின்பு சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் அதிக தரமுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A3- The Pros, Cons, And The X Factor : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X