Mi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம்! பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்!
ஏராளமான வதந்தி மற்றும் கசிவுகளுக்குப் பிறகு சியோமி Mi A3 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள் தற்பொழுது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய சியோமி Mi A3 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியை நிலைநாட்டின, அதனைத் தொடர்ந்து மேலும் அடுத்ததாகப் பல சூப்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்க சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்
சியோமி Mi A2 சீரிஸ் ஸ்மார்ட்போன் போலவே, சியோமி நிறுவனம் புதிய சியோமி Mi A3 சீரிஸின் கீழ் சியோமி Mi A3 மற்றும் சியோமி Mi A3 லைட் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெயர் மாற்றப்பட்ட ரெட்மி 6 ப்ரோ
இந்தியச் சந்தையில் Mi A2 லைட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படவில்லை, ஆனால் பின்னர் இந்த சாதனம் MIUI வசதி உடன் ரெட்மி 6 ப்ரோ என்று பெயர் மாற்றப்பட்டு இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி Mi A3 லைட்
சியோமி Mi A3 லைட் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் நிச்சயமாக சியோமி Mi A3 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 730 சிப்
Mi A3 ஸ்மார்ட்போன், சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த Mi CC9 மற்றும் Mi CC9e ஸ்மார்ட்போன்கள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை சியோமி Mi A3 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 சிப், 48 மெகா பிக்சில் கேமரா மற்றும் முழு ஸ்கிரீன் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரிபிள் கேமரா செட்டப்
அடுத்தபடியாக வரவிருக்கும் இந்த புதிய Mi A3 ஸ்மார்ட்போனில், மூன்று கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேமரா பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போனில், நிச்சயம் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் இருப்பது போலவே 48 மெகா பிக்சல் கேமரா வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Mi A3 லைட் விபரம்
அதேபோல் Mi A3 லைட் ஸ்மார்ட்போன் டூயல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi A3 ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது மற்றும் Mi A3 லைட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi A3 மற்றும் Mi A3 லைட் விலை
சியோமி Mi A3 மற்றும் Mi A3 லைட் என்ற இரண்டு ஸ்மார்ட்போனகளும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் விற்பனைக்குக் களமிறக்கப்படும். நிச்சயமாக Mi A3 ஸ்மார்ட் போன், ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி K20 ஸ்மார்ட்போன்களின் இடைப்பட்ட விலையில் அல்லது அவற்றின் விலையிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications