அட்டகாசமான சலுகையுடன் விற்பனைக்கு வரும் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் அன்மையில் அதன் புதிய சியோமி மி ஏ3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது இப்போது அமேசான்.இன், மி.காம், போன்ற தளங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போது குறிப்பிட்ட சலுகை வழங்கப்படுகிறது, அது என்னவென்று பார்ப்போம்.

4ஜிபி ரேம் கொண்ட மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட மி ஏ3 ஸ்மார்ட்போன் ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனை எச்டிஎப்சி கார்டு கொண்டு வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்பேக் சலுகையும், ஏர்டெல் நிறுவனம் சார்பில் டேட்டா ஆஃபர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications