Home
Mobile

சியோமி மி ஏ2: நம்பி வாங்க 5 அம்சங்கள்; இந்திய விலை & வெளியீடு.!

சியோமி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், அதன் மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

By Muthuraj

சியோமி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், அதன் மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு ஆனது மி ஏ2 என அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்திய சந்தையில் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போனாக களம் கண்ட மி ஏ1 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட ஸ்மார்ட்போனாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இதுவரை அறிவிக்கப்பட்ட மிகவும் ஈர்க்கக்கூடிய பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சியோமி மி ஏ2-வின் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் என்ன.? இதன் விலை நிர்ணயம் என்ன.? இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும்.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

01. டூயல் லென்ஸ் கேமரா.!

01. டூயல் லென்ஸ் கேமரா.!

சியோமி மி ஏ2-வின் முதல் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் பின்பக்கத்தில் உள்ள இரட்டை கேமரா அமைப்பு தான். சியோமி மி ஏ2 ஆனது அதன் பின்புறத்தில் 12 எம்பி + 20 எம்பி அளவிலான இரட்டை கேமராக்களை கொண்டுள்ளது. முன்னதாக வெளியான ரெட்மீ நோட் 5 ப்ரோ கூட 12 எம்பி + 5 எம்பி கேமரா தான் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மி ஏ2 ஸ்மாட்ர்ட்போனின் டூயல் லென்ஸ் அமைப்பானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது, அது 12 வெவ்வேறு காட்சிகளைக் கண்டறிந்து அற்புதமான தோற்றமுள்ள படங்களை கைப்பற்ற உதவுகிறது. இதன் முதன்மை சென்சார் ஆனது சோனி IMX486 12 மெகாபிக்சல் சென்சாரையும், இரண்டாம் சென்சார் சோனி IMX376 சென்சார் மற்றும் எப் / 1.75 துளை உடனான 20 மெகாபிக்சல் சென்சாரையும் கொண்டுள்ளது. வீடியோ அடிப்படையில், மி ஏ2 ஆனது 30fps வேகத்தின் கீழ் 4கே வீடியோ பதிவை நிகழ்த்தும்.

02. சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 ஆக்டா-கோர் செயலி.!

02. சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 ஆக்டா-கோர் செயலி.!

சியோமி மி ஏ2 இரண்டாவது முக்கிய அம்சமாக, அதன் சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 ஆக்டா-கோர் செயலி ஆகும். முன்னதாக வெளியான மி ஏ1 ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் உடன் ஒப்பிடுகையில், சிபியூ மற்றும் கிராபிக்ஸ் செயல்திறன் ஆகிய இரண்டிலும் ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும்.

03. 20 எம்பி செல்பீ கேமரா.!

03. 20 எம்பி செல்பீ கேமரா.!

மி ஏ2 ஸ்மார்ட்போனின் மூன்றாவது முக்கிய அம்சமாக அதன் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா திகழ்கிறது. ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளதை போலவே, இதிலும் எப் / 2.0 துளையுடன் இணைந்த முன் ஒரு 20 எம்பி சோனி IMX376 சென்சார் இடம்பெற்றுள்ளது. இது ஏஐ ஸ்மார்ட் பியூட்டி 4.0, ஏஐ சீன ரிக்கனைசேஷன் மற்றும் பொக்கே விளைவுகளுக்கான ஏஐ பேக்கிரவுண்ட் ப்ளர் போன்ற சுவாரசியமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் ரியல்-டைம் மேக் அப் ஆனது நீங்கள் வீடியோ அழைப்பில் இருக்கும்போதே அப்ளை செய்ய உதவும். இறுதியாக, இதன் 4500கே ஸ்பாட் எல்ஈடி லைட் ஆனது ஒளிநிலைமைகள் குறைவான இடத்தில் கூட நல்ல தெளிவான செல்பீக்களை எடுக்க உதவும்.

04. 5.99 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

04. 5.99 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனின் நான்காவது சிறப்பம்சமானது அதன் 5.99 இன்ச் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே தான். இது ரெட்மீ நோட் 5 ப்ரோ வழங்கும் 1080 x 2160 முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷனை வழங்குகிறது. இது ஒரு அங்குலத்திற்கு 403 பிக்ஸல் அடர்த்தி மற்றும் 1500: 1 நிலையான மாறுபாட்டு விகிதம் ஆகியவைகளை வழங்குகிறது. உடன் இதன் டிஸ்பிளே, நைட் மோட், ஐ மோட், ஸ்டாண்டர்டு மோட் மற்றும் கலர் டெம்ப்ரேஷர் அட்ஜெஸ்ட்மென்ட் போன்ற பல்வேறு முறைமைகளையும் வழங்குகிறது.

05. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்க முறைமை.!

05. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்க முறைமை.!

மி ஏ2 ஸ்மார்ட்போனின் ஐந்தாவது முக்கிய "அம்சம்" அதன் மென்பொருளாகும். மற்ற சியோமி ஸ்மார்ட்போன்கள் போலல்லாமல், மி ஏ2 ஆனது பெட்டிக்கு வெளியே சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்க முறைமை கொண்டு இயங்குகிறது. சீனாவில் வெளியாகும் மி 6எக்ஸ் ஆனது MIUI 9.5 கொண்டு இயங்க, இந்தியாவில் வெளியாகும் மி ஏ2 ஆனது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் ஷிப்பிங் செய்யப்படும்.

இதர அம்சங்கள்.!

இதர அம்சங்கள்.!

சீனாவில் மூன்று சேமிப்பு கட்டமைப்புகளின் கீழ் மி 6எக்ஸ் கிடைக்கிறது - 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு, மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, வைஃபை 802.11 a / b / n / ஏசி டூயல் பேண்ட், ப்ளுடூத் 5.0 லோ எனர்ஜி, ஜிபிஎஸ், க்ளோனஸ், பீடியூ, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, 4ஜி வோல்ட் மற்றும் ஒரு ஐஆர் ப்ளாஸ்டர் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 திறன் கொண்ட 3010mAh திறன்கொண்ட நீக்க முடியாத பேட்டரியை கொண்டுள்ளது. பரிமாணங்களின் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் 158.7 x 75.4 x 7.3 மிமீ மற்றும் 168 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

மி ஏ2 இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை நிர்ணயம்.!

மி ஏ2 இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை நிர்ணயம்.!

வெளியீட்டை பொறுத்தவரை அதிகாரப்பூர்வமான வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால், சியோமி மி ஏ2 இந்த ஜூன் மாத நடுப்பகுதியில் விற்பனைக்கு வரலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சியோமி மி ஏ2 ஆனது ஒரு ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஒரு மினி பிரீமியமாகவே வெளியாகலாம். இதன் 4ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ரூ.16,800/-க்கும் மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடல் ரூ.18,900/-க்கும் மற்றும் ஹை எண்ட் மாடல் ஆனது ரூ.17,999/-க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Mi A2 (Mi 6X) Top 5 Features: Specifications, Expected Price in India, Launch Date. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X