20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.!
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம், அதன்படி விலைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி ஏ2 :
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மி ஏ2 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி இ என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications