பேஸ் அன்லாக் வசதியுடன் சியோமி மி 8 அறிமுகம்.!
சியோமி மி 8 சாதனம் பொதுவாக 6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 8 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3டி முகம் அங்கீகாரம் மற்றும் பேஸ்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
அதன்பின்பு 88.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கிளாஸ் பேக், டூயல் கேமரா,போன்ற பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் மி 8 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
சியோமி மி 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.21-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் 18:7:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
இக்கருவி குவால்காம் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சியோமி மி 8 சாதனம் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மெமரி:
சியோமி மி 8 சாதனம் பொதுவாக 6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய
செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


விலை:
சியோமி மி 8 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை
ரூ.28,460-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications