சியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

சியோமி மி 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டுஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 8 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 31-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதன்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த சியோமி மி 8 ஸ்மார்ட்போனில்
இடம்பெற்றுள்ளது.

சியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

குறிப்பாக ஃபேஸ் ஐடி தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த மி 8 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு வந்த தகவலின் அடிப்படையில் சியோமி மி 8 ஸ்மார்ட்போன் 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும்.

மேலும் சியோமி மி 8 பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு பல்வேறு ஆப் பயன்பாடுகளை உபயோகம் செய்ய அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 8 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

சியோமி மி 8 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

விரைவில் வெளிவரும் இந்த சியோமி மி 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஓன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு போட்டியாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi 8 Launch Date Is May 31, Xiaomi Confirms ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X