Home
Mobile

32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் 32ஜிபி மெமரியுடன் அசத்தலான மி 6எக்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்கக்து.

32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.!

குறிப்பாக 32ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்போனின் விலை ரூ.14,000/- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன்.

32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.!

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Mi 6X with 32 GB storage officially launched for Rs 14,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X