Mi 11i ஸ்மார்ட்போன் அம்சங்கள் இதுதான்: எல்லாமே ஒஸ்தி., விலையும்தான்!
எம்ஐ 11ஐ ஸ்மார்ட்போன் பிளாட்அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 11 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.55,900 ஆக இருக்கிறது.

எம்ஐ 11 ஐ ஸ்மார்ட்போன் உடன் எம்ஐ 11 லைட், எம்ஐ லைட் 5ஜி மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் மெய்நிகர் நிகழ்வில் அறிமுகமானது. எம்ஐ 11 லைட், எம்ஐ 11 லைட் 5ஜி, எம்ஐ 11 அல்ட்ரா ஆகியவற்றுடன் இருக்கும் வேறுபாடுகள் குறித்து அறியலாம். சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ 11 ப்ரோ போல் இன்றி எம்ஐ 11ஐ சில வேறுபாடுகளை கொண்டுள்ளது. எம்ஐ 11ஐ ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் பக்க வாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டால்பி அட்மோஸ் கூடிய இரட்டை ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.
எம்ஐ 11ஐ விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். எம்ஐ 11 ஐ ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.60,300 எனவும் அல்லது ரூ.55,900 என்ற விலையில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் செலஸ்டியல் சில்வர், காஸ்மிக் பிளாக் மற்றும் ஃப்ரோஸ்டி வைட் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஐரோப்பாவில் அனைத்து அதிகாரப்பூர்வ சியோமி சேனல்கள் மூலமாக முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிற உலகளாவிய சந்தைகளில் கிடைக்கும் விவரங்கள் குறித்து தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
எம்ஐ 11ஐ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மேலும் அட்ரினோ 660 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

எம்ஐ 11ஐ ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
எம்ஐ 11ஐ ஸ்மார்ட்போனானது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரட்டை உள்சேமிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வரும். இணைப்பு விருப்பங்களை பொருத்தவரையில், இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இருக்கும்.
சியோமி எம்ஐ 11ஐ ஸ்மார்ட்போன் ஆனது 4520 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எடை 196 கிராம் எடையோடு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications