உலகளவில் அசத்தலான சியோமி Mi 11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சியோமி நிறுவனம் மெய்நிகர் நிகழ்வு மூலம் அதன் அசத்தலான மி 11 ஸ்மார்ட்போன் மாடலை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது..

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி

குறிப்பாக டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் உடன் வெளிவருகிறது. அதேபோல் இந்த சாதனம் 2கே டிஸ்பிளே, ஹோல் பஞ்ச் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யோமி மி 11 ஸ்மார்ட்போன்

அதேபோல் சியோமி மி 11 ஸ்மார்ட்போன் உடன் MIUI 12.5 உலகளாவிய வெளியீட்டையும் அறிவித்தது இந்நிறுவனம். குறிப்பாக இது சிஸ்டம் ஆப்களின் சிபியு பயன்பாட்டை 22 சதவிகிதம் மற்றும் அவற்றின் மின் நுகர்வை 15 சதவிகிதம் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் போக்கோ எம்3.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?நாளை விற்பனைக்கு வரும் போக்கோ எம்3.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச்

சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் 2கே WQHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,440x3,200 பிக்சல் தீர்மானம், 1500 nits பிரைட்நஸ் வசதி, 120Hz refresh rate உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 )

ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 )

இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கார்னிங்  கொரில்லா கிளாஸ் வசதி

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதி

சியோமி மி 11 ஸ்மார்ட்போன் HDR10+ ஆதரவு, Motion Estimation, Motion Compensation மற்றும் கார்னிங்கொரில்லா கிளாஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

108 மெகாபிக்சல் முதன்மை

மி 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார்+ 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் +
5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20 எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆதரவு இவற்றுள் அடக்கம்

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் அடக்கம்.

4600 எம்ஏஎச் பேட்டரி

4600 எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி 11 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் மி டர்போசார்ஜ் 55W wired மற்றும் 50W wireless வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் கிரே போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

உயர்வான விலை

உயர்வான விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.65,800-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.70,100-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Mi 11 With Snapdragon 888 SoC Launched Globally: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X