Mi 11 போன்ற டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வருகிறதா Mi 11 Pro: வெளியான தகவல்!
சியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் எம்ஐ 11 சாதனத்தை ஸ்னாப்டிராகன் 888 உடனான முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தில் அடுத்த தலைமுறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதேபோல் எம்ஐ 11 தொடரின் கீழ் மற்றொரு சாதனமாக எம்ஐ 11 ப்ரோ என்ற பெயருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்ட்ராய்ட் அத்தாரிட்டி வெளியிட்ட அறிக்கையில், வெய்போவில் அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் நிலைய தகவலின்படி அடுத்து எம்ஐ 11 ப்ரோ வெளியாக உள்ளதாகவும் இதில் பல சுவாரஸ்ம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சியோமி எம்ஐ 11 ப்ரோ மாடல் எம்ஐ 11 போன்ற அதே டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் எம்ஐ 11 வாங்குவதற்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவித்த நிலையில் எம்ஐ 11 ப்ரோ ஆண்டின் பிற்பகுதியில் வரலாம் என கூறப்படுகிறது. கசிந்த தகவலின்படி சியோமி டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்ட செல்பிகேமரா அமைப்பை தயாரிப்பதில் வேலை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன் அட்ரினோ 660 ஜிபீயு உடன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் அம்சத்தோடு 128 ஜிபி சேமிப்பு மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதில் 108 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 20 எம்பி பஞ்ச் ஹோல் கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications








