சூப்பர்ல.. இந்தியாவில் Mi 11, Mi 11i, Mi 11 Pro உடன் Mi 11 Ultra கூட அறிமுகமா? எப்போ தெரியுமா?

|

மி 11 அல்ட்ரா வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறிப்பிட்ட தேதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மி 11 தொடரின் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்குப் பதிலாக, முழு மி 11 தொடரும் இப்போது ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அல்ட்ரா வேரியண்ட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தியாவில் Mi 11 அல்ட்ரா அறிமுகமா?

இத்தியாவில் Mi 11 அல்ட்ரா அறிமுகமா?

சியோமி இந்தியா தலைவரான மனு குமார் ஜெயின் ட்விட்டரில் டீஸ் செய்துள்ளார், இந்தியாவில் Mi 11i, Mi 11 Pro மற்றும் Mi 11 அல்ட்ராவுடன் கொண்டு வருவதற்கு Xiaomi வேலை செய்யக்கூடும் என்று டீஸ்செய்திருக்கிறார். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். Mi 11 தொடரில் உள்ள அனைத்து மாடல்களையும் இவர் குறிப்பிட்டுப் பேசுகிறாரா அல்லது பிராண்டிலிருந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்காக பேசுகிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

மி 11 லைட்டை இந்தியாவுக்கு வருமா?

மேலும், ஸ்னாப்டிராகன் 780 ஜி சிப்செட் உடன் இயங்கும் மி 11 லைட்டை இந்தியாவுக்கு சியோமி கொண்டு வருமா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. மேலும் இந்தத் தொடரின் மலிவான ஸ்மார்ட்போன் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் 23 ஆம் தேதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இடையில் உள்ள காரணத்தினால், இடைப்பட்ட காலத்தில் இன்னும் பல சுவாரசிய தகவலை நிறுவனம் லீக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mi 11 Pro சிறப்பம்சம்

Mi 11 Pro சிறப்பம்சம்

Mi 11 Pro என்பது Mi 11 அல்ட்ராவின் டவுன் டன் பதிப்பாகும். இது 6.81 இன்ச் WQHD பிளஸ் 3200 × 1440 பிக்சல்கள் கொண்ட E4 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் தகவமைப்பு புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, டால்பி விஷன் ஆதரவு மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது.

செவ்வாயில் பாம்பு போன்ற 'ப்ளூ டூன்ஸ்' உருவம்: என்ன அது? நாசா பரபரப்பு தகவல்.!செவ்வாயில் பாம்பு போன்ற 'ப்ளூ டூன்ஸ்' உருவம்: என்ன அது? நாசா பரபரப்பு தகவல்.!

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா அமைப்பு

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா அமைப்பு

இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மி 11 ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் கொண்ட சாம்சங் ஜிஎன் 2 பிரைமரி சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் செகண்டரி கேமராமற்றும் 123 டிகிரி எஃப்ஒவி கொண்ட 8 மெகாபிக்சல் டெலி-மேக்ரோ, 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம். முன்புறத்தில், நீங்கள் 20MP செல்ஃபி ஷூட்டரைப் பெறுவீர்கள்.

இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!

 பேட்டரி

பேட்டரி

மி 11 ப்ரோ 5,000 எம்ஏஎச் பேட்டரியையும் 67W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மி 11 ப்ரோவில் இரட்டை ஹர்மன் கார்டன் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 சான்றிதழ், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5 ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை கொடுப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi 11, Mi 11i, Mi 11 Pro could join Mi 11 Ultra launch in India on April 23 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X