Home
Mobile

64எம்பி ரியர் கேமராவுடன் சியோமி Mi 11 Lite ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை வரும் ஜூன் 25-ம் தேதி முன்பதிவு செய்ய முடியும். பின்பு வரும் ஜூன் 28-ம் தேதி முதல் இந்த சியோமி மி 11 லைட் சாதனத்தின் விற்பனை துவங்குகிறது.

4ஜி பதிப்பு மட்டுமே தற்போது அறிமுகம்

4ஜி பதிப்பு மட்டுமே தற்போது அறிமுகம்

அதேபோல் இந்தியாவில் மி 11 லைட் ஸ்மார்ட்போனின் 4ஜி பதிப்பு மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சியோமி
இந்தியாவின் தலைவர் ஆன மனு குமார் ஜெயின் அவர்கள் மி 11 லைட்டின் 5ஜி மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக
கூறியுள்ளார்.

157 கிராம் எடை

157 கிராம் எடை

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது குறைந்த எடையை கொண்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் எடை 157 கிராம் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மிகவும் மெல்லிய எடையை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் விலை

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி11 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஜாஸ் ப்ளூ, டஸ்கனி கோரல் மற்றும் வினைல் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது.

 ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்

ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்

அதேபோல் இந்த சியோமி மி 11 லைட் சாதனத்தை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சியோமி மி 11

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் உடன் மி வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் இப்போது சியோமி மி 11 லைட் சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி 11 லைட் அம்சங்கள்

சியோமி மி 11 லைட் அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED 10-பிட் டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
  • 60Hz மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் விருப்பங்கள்
  • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
  • 20:9 திரை விகிதம்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி
  • இயங்குதளம்: MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
  • சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜிபி உடன் அட்ரினோ 618 ஜிபியு ஆதரவு
  • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெலிபோட்டோ கேமரா
  • 30fps பிரேம் வீதத்தில் 4K வீடியோ பதிவு செய்யும் ஆதரவு உள்ளது
  • செல்பீ கேமரா: 16எம்பி
  • பேட்டரி: 4250எம்ஏஎச் பேட்டரி
  • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி
  • இன்ஃப்ராரெட் (ஐஆர்), ப்ளூடூத்
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்ஸ் வசதி

Best Mobiles in India

English summary
Mi 11 Lite With Snapdragon 732G SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X