மிகமிக மெலிது., குறைந்த எடை: எம்ஐ 11 லைட் ஸ்மார்டோபோன் விலை, சிறப்பம்சங்கள் இதோ!

|

சியோமி நாட்டில் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 தடிமன் உடன் வரும் என கூறப்படுகிறது. இது மிகவும் மெலிதான வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. மேலும் இதன் எடை வெறும் 157 கிராம் எடையோடு இருக்கும் என கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மெலிதான மற்றும் லேசான ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ 11 லைட் பெரிய 4250 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் எனவும் அமோலெட் 10-பிட் பேனல், ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது.

6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ்

6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ்

முன்பக்கத்தில் ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என கூறப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு இந்த ஸ்மார்ட்போன் வரும் என கூறப்படுகிறது. இது மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடன் வரும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி அட்ரினோ 618 ஜிபீயூ, 8 ஜிபி எல்பிடிடிஆர் 4எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயூஐ 12 இயங்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 5 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு இது வரும் என கூறப்படுகிறது. இந்த கேமரா விலாக் பயன்முறையையும் 30எஃப்பிஎஸ் 4கே வீடியோ பதிவோடு வரும் என ஆதரிக்கப்படுகிறது. இது 16 எம்பி முன்புற செல்பி கேமராவுடன் வருகிறது.

33 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

33 வாட்ஸ் வேகமான சார்ஜிங்

எம்ஐ 11 லைட் 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இது 30 நிமிட சார்ஜிங் முழுநாள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இது ஐபி53 சான்றிதழ் உடன் வருகிறது. இ்நத ஸ்மார்ட்போன் 100 சதவீத பாதுகாப்புடன் வருவதாக கூறப்படுகிறது. ஹை ரெஸ் ஆடியோ ஆதரவு, ப்ளூடூத் ஆதரவு, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

இரண்டு சேமிப்பு கட்டமைப்பு

இரண்டு சேமிப்பு கட்டமைப்பு

எம்ஐ 11 லைட் இரண்டு சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜாஸ் ப்ளூ, டஸ்கனி பவளம், வினைஸ் பிளாக் உடன் வரும் எனவும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை ரூ.21999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.23999 எனவும் விற்பனைக்கு வருகிறது.

முன்கூட்டிய ஆர்டர்கள்

முன்கூட்டிய ஆர்டர்கள்

இதன் முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூன் 25 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக வ ரும் என கூறப்படுகிறது. இதன் முதல் விற்பனை ஜூன் 28 ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் முன்கூட்டிய ஆர்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 தள்ளுபடியோடு வரும் என கூறப்படுகிறது

ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி ஆதரவு

ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி ஆதரவு

எம்ஐ 11 லைட் 4ஜி சாதனமானது 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வீதத்தோடு வருகிறது. எச்டிஆர் 10 ப்ளஸ் மற்றும் டால்பி விஷன் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
MI 11 Lite Smartphone Announced at 6GB RAM, 8GB RAM: Price, Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X