Mi 11 மற்றும் Mi 11 Lite ஸ்மார்ட்போனின் இந்தியப் பதிப்பு பற்றிய முக்கிய தகவல்.. அறிமுகம் எப்போ?

|

சியோமி நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் Mi 11 ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இப்போது Mi 11 Lite என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. Mi 11 மற்றும் Mi 11 Lite ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்தியப் பதிப்பின் ஸ்டோரேஜ், ரேம், வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Mi 11 and Mi 11 Lite ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்

Mi 11 and Mi 11 Lite ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்

Mi 11 and Mi 11 Lite ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவுக்கு விரைவில் வரவிருப்பதாகவும், இதன் ரேம், சேமிப்பு மற்றும் வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல்கள் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Mi 11 கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, Mi பிராண்டின் மார்க்கெட்டிங் முன்னணி சுமித் சோனல் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Mi 11 லைட் எப்போது அறிமுகம்?

Mi 11 லைட் எப்போது அறிமுகம்?

அதேபோல், Mi 11 அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதன் லைட் வெர்ஷன் மாடலாக விரைவில் Mi 11 lite ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற வதந்தி தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. Mi 11 லைட் வருகிற மார்ச் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mi 11 போன், 8 ஜிபி ரேம் உடன் வரவுள்ளது, Mi 11 லைட் ஸ்மார்ட்போன், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

Mi 11 மற்றும் Mi 11 லைட் இந்தியா மாடல் விபரம்

Mi 11 மற்றும் Mi 11 லைட் இந்தியா மாடல் விபரம்

Mi 11 மற்றும் Mi 11 லைட் இந்தியா மாடல்கள் பற்றிய தகவல்களைப் பகிர டிப்ஸ்டர் இஷான் அகர்வால் ஊடகத்துடன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். Mi 11 ஸ்மார்ட்போன், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி என இரண்டு வேரியண்ட் மாடலாகவும். Mi 11 லைட், மறுபுறம், 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Mi 11 மற்றும் Mi 11 லைட் வண்ண விருப்பங்கள்

Mi 11 மற்றும் Mi 11 லைட் வண்ண விருப்பங்கள்

Mi 11 க்ரெய் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் என்றும், அதே நேரத்தில் Mi 11 லைட் ஸ்மார்ட்போன் பிங்க், பிளாக் மற்றும் ப்ளூ கலர் விருப்பங்களில் வரக்கூடும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது. இந்தியா வெளியீட்டுக் காலக்கெடு குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. சோனல், வெளியிட்டுள்ள தகவலில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் பற்றிய தகவல்கள் ஜனவரி இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!

ஸ்னாப்டிராகன் 732 சிப்செட் உடன் வெளிவருமா?

ஸ்னாப்டிராகன் 732 சிப்செட் உடன் வெளிவருமா?

வெளியாகியுள்ள தகவலின்படி Mi 11 லைட் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 732 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. மேலும், இது 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உடன் கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இது 6' இன்ச் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi 11 and Mi 11 Lite Leak Information About Indian Model RAM Storage Chipset and Color: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X