Mi 10T சீரிஸ்க்கான வெயிட்டிங் முடிஞ்சுது.. கலக்கலாக இந்தியாவில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம் இன்று எம்ஐ 10 டி சீரிஸ் 5 ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொடரில் Mi 10T மற்றும் Mi 10T Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் விலை விபரம் மற்றும் முக்கிய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Mi 10T ஸ்மார்ட்போன்கள்

Mi 10T ஸ்மார்ட்போன்கள்

சியோமி அறிமுகம் செய்துள்ள Mi 10T ஸ்மார்ட்போன்கள் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் வருகிறது. இது 5G ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 12 மூலம் இயங்குகிறது. புதிய Mi 10T ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன், Mi 10T Pro 108 மெகாபிக்சல் கேமராவுடன் 5,000mah பேட்டரியை கொண்டுள்ளது.

சியோமி Mi 10T சிறப்பம்சம்

சியோமி Mi 10T சிறப்பம்சம்

  • 6.67' இன்ச் கொண்ட 2340 × 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
  • அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இயங்குதளம்
  • எல்பிடிடிஆர் 5 கொண்ட 8 ஜிபி ரேம்
  • 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி IMX682 சென்சார்
  • 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ சென்சார்
  • 8K வீடியோ ரெக்கார்டிங்
  • 20 மெகாபிக்சல் செல்பி கேமரா

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

பேட்டரி
  • 5G SA / NSA டூயல் 4G VoLTE
  • Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz) 4×4 MIMO
  • புளூடூத் 5.1
  • ஜிபிஎஸ்(L1 + L5)
  • NFC
  • யுஎஸ்பி டைப் C
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி Mi 10T ப்ரோ சிறப்பம்சம்

சியோமி Mi 10T ப்ரோ சிறப்பம்சம்

  • 6.67' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
  • 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
  • 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 13 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
  • 20 மெகாபிக்சல் செல்பி கேமரா

NASA தேர்வு செய்த கரூர் மாணவர்களின் செயற்கைக்கோள்.! விண்ணில் பாயப்போவது எப்போது தெரியுமா?

பேட்டரி
  • 5G SA / NSA டூயல் 4G VoLTE
  • Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz) 4×4 MIMO
  • புளூடூத் 5.1
  • ஜிபிஎஸ்(L1 + L5)
  • NFC
  • யுஎஸ்பி டைப் C
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி Mi 10T சீரிஸ் விலை

சியோமி Mi 10T சீரிஸ் விலை

சியோமி Mi 10T, 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ .37,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், Mi 10T ப்ரோ 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு ரூ .39,999 என்ற விலையில் காஸ்மிக் பிளாக் மற்றும் மூன் வைட் நிறங்களில் வருகிறது. இன்று நள்ளிரவு முதல் பிளிப்கார்ட், மை.காம், மி ஹோம் ஸ்டோர்ஸ், மி ஸ்டோர்ஸ் மற்றும் மி ஸ்டுடியோ மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi 10T series launched in India with 6.67-inch FHD 144Hz display Snapdragon 865 5000mAh battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X