பசிபிக் சன்ரைஸ் நிறத்தில் Mi 10i நாளை அறிமுகம்.. முக்கிய சிறப்பம்சங்கள் இதுவாக தான் இருக்கும்..

|

சியோமி நிறுவனம் தனது Mi.com வலைத்தளத்தின் வழியாக புதிய Mi 10i ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான பசிபிக் சன்ரைஸ் வண்ண விருப்பத்தில் இந்தியாவுக்கு வருகிறது என்று டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய வண்ண விருப்பம் சியான் மற்றும் ஆரஞ்சு கிரேடியன்ட் கலவையுடன் மிரட்டலான கண்கவர் தோற்றத்தில் வெளியாகும் என்று டீஸ் செய்துள்ளது.

Mi 10i ஸ்மார்ட்போன்

Mi 10i ஸ்மார்ட்போன்

இத்துடன், Mi 10i ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்கள் ஆன்லைனில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 5 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறிய மாற்றங்களுடன் மறுவடிவமைக்கப்பட்ட ரெட்மி நோட் 9 புரோ 5 ஜி போன் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.

பசிபிக் சன்ரைஸ் நிறம் டீஸ்

சியோமி வெளியிட்ட முந்தைய டீஸர்கள் சொல்லும் தகவல்படி Mi 10i இல் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சியோமியின் Mi.com தளத்தில் பசிபிக் சன்ரைஸ் நிறம் பற்றிய தகவல் வெளியாகியதுடன், அமேசான் இந்தியா வலைத்தளத்திலும் சியோமியின் பசிபிக் சன்ரைஸ் நிறம் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கிடைக்கும் என்பதை அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!

Mi 10i நாளை (ஜனவரி 5) அறிமுகமாகும்

Mi 10i நாளை (ஜனவரி 5) அறிமுகமாகும்

Mi 10i ஸ்மார்ட்போனின் பசிபிக் சன்ரைஸ் வண்ணம், கடந்த மாதம் வலைத்தளத்தில் லீக் செய்யப்பட்ட ப்ளூ மற்றும் பிளாக் வண்ண விருப்பத்துடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் Mi 10i நாளை (ஜனவரி 5) அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியர்களைக் கருத்தில் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சியோமி Mi 10i போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள்

சியோமி Mi 10i போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள்

 • 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்
 • MIUI 12 உடன் அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
 • 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பம்
 • 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
 • 512 ஜிபி வரை எஸ்டி கார்டு ஸ்டோரேஜ்
 • முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?

  குவாட் பின்புற கேமரா அமைப்பு
  • குவாட் பின்புற கேமரா அமைப்பு
  • 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கேமரா
  • 2 மெகா பிக்சல் சென்சார்
  • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
  • 16 மெகா பிக்சல் செல்பி கேமரா
  • 5G ஆதரவு
  • பாஸ்ட் சார்ஜிங் உடன் 4820 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi 10i is likely to Launch on January 5 in Blue and Black shades alongside with Pacific Sunrise colour : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X