Home
Mobile

Mi 10 Pro Launch: வெளியானது சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி.!

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் எது என்று கேட்டால், சியோமி மி10 மற்றும் சியோமி மி 10ப்ரோ என்றுதான் கூறவேண்டும். இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மி 10 தொடர்

மி 10 தொடர்

குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதால் மி 10 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் ஆன்லைன் வழியாக மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் அன்மையில் வெளிவந்த இந்தஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது M2001J2C என்ற குறியீட்டு பெயரின் கீழும், பின்பு சியோமி மி 10 ப்ரோ ஆனது M2001J1Cஎன்கிற குறியீட்டு பெயரும் மியூஐ 11 எ20.1.6 குறியீட்டில் காணப்பட்டுள்ளது. அதன்படி சியோமி மி10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 66வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 க்வாட் கேமரா

க்வாட் கேமரா

குறிப்பாக இந்த சாதனத்தில் உள்ள க்வாட் கேமரா அமைப்பில்,மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக இருக்க, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் தனித்தனியாக வைக்கப்படும் நான்காவது கேமராவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 10ப்ரோ

சியோமி மி 10ப்ரோ

சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2080 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865சிப்செட்

ஸ்னாப்டிராகன் 865சிப்செட்

இந்த சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதியுடன் வெளிவரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 512ஜிபி உள்ளடக்க மெமரி

512ஜிபி உள்ளடக்க மெமரி

குறிப்பாக இந்த மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது,இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி 10ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Mi 10 Pro Launch Date Confirmed for February 13: Price, Specs and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X