நாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அதிரடி முடிவு

|

சியோமி நிறுவனமும் தனது சியோமி எம்ஐ 10 ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு 108எம்பி கேமராவு ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

சியோமி மி 10 ஸ்மார்ட்போன்கள் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 1,200 nits பிரைட்நஸ், 5,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, டிசி டிம்மிங், டிசிஐ-பி 3 கலர் வரம்பு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது

2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்பட்டுள்ளது,எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி 10 கேமரா

சியோமி மி 10 கேமரா

சியோமி மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி சென்சார் + 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரியில் சிறிய மாற்றம்

பேட்டரியில் சிறிய மாற்றம்

இரண்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளில் சிறிய மாற்றம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி சியோமி மி10 ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு மி 10ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50வாட் வயர் பாஸ்ட் சார்ஜிங், 30வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளது, மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111 ax (2.4GHz + 5GHz) 8 x / MU-MIMO, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி எம்ஐ 10 விலை

சியோமி எம்ஐ 10 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 3999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.40,920) 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4299யுவான்(இந்திய மதிப்பில் ரூ.43,990) 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4699யுவான்(இந்திய மதிப்பில் ரூ.48,080)

மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம்

மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம்

சியோமி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த போனானது வருகிற மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மார்ச் 31ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த போனின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு!ரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு!

போன் வெளியீட்டு ஒத்திவைப்புக்கு காரணம்

போன் வெளியீட்டு ஒத்திவைப்புக்கு காரணம்

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இதையடுத்து வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Mi 10 model launch postponed due to the impact of corona virus and national lockdown

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X