Home
Mobile

ஒன்பிளஸ் 7T போனின் அட்டகாசமான கோல்டு வேரியண்ட் வெளியிடப்படாதது ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன்களை இரண்டு நிறங்களில் ஒன்பிளஸ் நிறுவனமா அறிமுகம் செய்தது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யாத ஒரு நிறத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஒன்பிளஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர் வெளியிட்ட தகவல்

ஒன்பிளஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர் வெளியிட்ட தகவல்

வெய்போவில் ஒன்பிளஸ் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹாவோ ரன் வெளியிட்டுள்ள தகவல்படி, ஒன்பிளஸ் நிறுவனம் முதலில் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனை உலோக தங்க நிறத்தில் கோல்டு வேரியண்ட் மாடலாக வெளியிடத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் 7T கோல்டு வேரியண்ட்

ஒன்பிளஸ் 7T கோல்டு வேரியண்ட்

மேலும் அப்பொழுது வடிவமைக்கப்பட்ட கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் புகைப்படமும் வெய்போ தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் கிரேடியண்ட் டிசைனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கேமரா உள்ள மாடுளும் கூட கிரேடியன்ட் கோட்டிங்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சரியான காரணம் என்ன ?

சரியான காரணம் என்ன ?

இந்த அட்டகாசமான தங்க நிற கோல்டு வேரியண்ட் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் மாடலை ஏன் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறித்த சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஸ்மார்ட்போன் சந்தையில் தங்க நிற வேரியண்ட் மாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டது என்பது கூட காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் 7T கோல்டு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன்களை கிளேஸியர் ப்ளூ மற்றும் ஃபிராஸ்டட் சில்வர் நிறத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் வெவ்வேறு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Metallic Gold OnePlus 7T That Was Never Released : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X