வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ் - இனி எல்லாம் சாத்தியமே.!

இதெப்படி சாத்தியம்.? இது பாதுகாப்பானதா.? இதில் என்ன முறை பயன் படுத்தப்படுகிறது.?

|

குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டும் தயாரிப்புகளை நாம் சந்திக்கும் வரை சீன தயாரிப்புகளை யாராலும் வீழித்திட இயலாது. சீன தயாரிப்புகளை போலவே மிகவும் புதுமையான மற்றும் ஆற்றல்மிக்க சாதனங்களை உலகின் இதர தொழில்நுட்ப ஜாம்பவான் நாடுகளும் தயாரித்தால் நாம் ஏன் சீன தயாரிப்புகள் மீது ஆர்வம் கொள்ளப்போகிறோம் - என்பது நிதர்சனம்.

முக்கியமாக, ஸ்மார்ட்போன் என்றதும் பேட்டரித்திறன் என்பது மிகவும் கவனிக்ககூடிய ஒரு அம்சமாக திகழ்வதின் மூலம் பேட்டரி சார்ந்த தெளிவை நாம் பெற்று விட்டதாகவே கருதுகிறேன். அதேசமயம் ஸ்மார்ட்போனில் பேட்டரியை சேமிப்பதும், அதை பராமரிப்பதும் எவ்வளவு கடினம் என்பது நாம் அனைவரும் அனுபவப்பட்டு அறிந்த ஒன்றே.

கருவியின் பேட்டரியை பராமரிப்பது எவ்வளவு சிக்கலோ அதே போன்ற சிக்கல் கருவியை சார்ஜ் செய்வதிலும் உண்டு. குறைந்தபட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரமாவது நாம் பல்லைக் கடித்துக்கொண்டு 100% சார்ஜ் ஆக காத்திருக்க வேண்டும். இனி அதற்கு அவசியமே இல்லை.!

தீர்வு

தீர்வு

சீன நுகர்வோர் மின்னணு நிறுவனமான மெய்ஸூ, பார்சிலோனாவில் நிகழ்ந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் 'உலகின் மிக வேகமான பேட்டரி சார்ஜ் தீர்வு' என்று அதன் சார்ஜர் ஒன்றை அறிமுகம் செய்தது.

எம்சார்ஜ்

எம்சார்ஜ்

நிறுவனத்தின் கூற்றுபப்டி ஸ்மார்ட்போனை 0% இருந்து வெறும் 20 நிமிடங்களில் 100% அதாவது ஒரு முழு சார்ஜ் செய்ய சூப்பர் எம்சார்ஜ் உதவுமாம். இந்த சூப்பர் எம்சார்ஜ் சாதகமானது மெய்ஸூ ஆர் & டி அணி மூலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் மின் வோல்டேஜ்

உயர் மின் வோல்டேஜ்

சூப்பர் எம்சார்ஜ் என்று பெயர் கொன்டுள்ள இந்த தொழில்நுட்பம் தற்போதைய வேகமாக சார்ஜ் தொழில்நுட்பங்களை விட மிக மிக வேகமானதாகும் அதாவது பேட்டரிகளை உயர் மின் வோல்டேஜ் கொண்டு பொறுப்பான முறையில் கருவியை சார்ஜ் செய்யும்.

பவர் பேன்க் அவசியமில்லை

பவர் பேன்க் அவசியமில்லை

ஒரு பத்திரிகை அறிக்கையில், மெய்ஸூ நிறுவன கூற்றின்படி"சூப்பர் எம்சார்ஜ் கொண்டு, ஒரு வெற்று பேட்டரியை ஒரு தேநீர் அருந்தும் நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இனி பவர் பேங்குகளை சுமக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெப்ப மேலாண்மை

வெப்ப மேலாண்மை

இந்த சூப்பர் எம்சார்ஜ் மூலம் 55வாட் என்றவொரு அதிகபட்ச திறன் மூலம் மற்றும் ஒரு 11வி/ 5ஏ சார்ஜ் இணைப்பு பயன்படுத்தி வெறும் 20 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்ய முடியும். உடன் சார்ஜ் செய்யும் போது வெப்பமடைவதை தடுக்கும் வண்ணம் ஒரு வெப்ப மேலாண்மை அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

39 டிகிரி செல்சியஸ்

39 டிகிரி செல்சியஸ்

மெய்ஸூ சூப்பர் எம்சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யும் போது கருவியானது ஒரு பாதுகாப்பான எல்லையான 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்பதால் ஆபத்து என்பதற்கு இடமே இல்லை என்கிறது நிறுவனம்.

டேட்டா கேபிள்

டேட்டா கேபிள்

"குறைந்த வெப்ப-இழப்பு மற்றும் 160வாட் ஆதரவு திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட டேட்டா கேபிள் சேர்த்து இந்த சூப்பர் எம்சார்ஜ்சாதனத்தை ஒரு பாதுகாப்பான மற்றும் நீடித்த கருவியாக இருக்க செய்யும் என்பது உறுதி. பரிசோதனையின் படி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி 800-க்கும் மேற்பட்ட மிறை சார்ஜ் செய்யப்பட்டபின்பும் 80% பேட்டரி திறன் தக்க வைத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சேவை வாழ்க்கை கொடுத்தது, உடன் இது நம்பத்தகுந்த சாதாரண பேட்டரிகளை விட 4 மடங்கு அதிக மின்சாரத்தை தாங்க கூடியது" என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

வெற்றி

வெற்றி

"இதுபோன்ற ஒரு புதுமையான கண்டுபிடிப்பு என்பது ஒரு சுலபமான வேலை அல்ல, நாம் கொண்டுள்ள பேரார்வம் மூலமாகத்தான் நாம் வெற்றியை அடைய முடியும். அவ்வண்ணம் பல இந்த சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பல சிரமங்களை மற்றும் தடைகளை கடந்தோம்" என்று லி தாவோ,மெய்ஸூ ஆர்&டி அணி மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

யூஎஸ்பி-சி: அனைத்து உபகரணங்களையும் சார்ஜ் செய்யும் அடுத்த தலைமுறை உபகரணம்.!

Best Mobiles in India

English summary
Meizu unveils Super mCharge fast charging solution at MWC 2017: a full charge in just 20 minutes. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X