டூயல் ஸ்க்ரீன்; டூயல் கேம் அமைப்புடன் மெய்ஸூ ப்ரோ 7.!

|

டூயல் ஸ்க்ரீன் அமைப்பு கொண்ட மெய்ஸூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 26 அன்று வெளியிடப்படுவது உறுதியாகியுள்ளது. அதை உறுதி செய்யும் நோக்கில் மெய்ஸூ நிறுவனம், தொலைபேசி சார்ந்த ஒரு டீஸர் படத்தை வெளியிடப்பட்டது.

வெளியான டீஸர் ஸ்மார்ட்போனின் மிகச்சிறந்த அம்சத்தை காட்சிப்படுத்துகிறது. அதாவது சாதனம் அதன் இரண்டாம் நிலைத் திரையை காட்டுகிறது. யோட்டாபோன் (YotaPhone) முயற்சிகளைப் போலல்லாமல், இது ஒரு இ-இன்க் டிஸ்ப்ளே பின்புறம் இடம்பெறுகிறது. இந்த மெய்ஸூ சாதனம் ஒரு வண்ண டிஸ்பிளேவை கொண்டே வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே கேமராவிற்கு சற்று கீழே வைக்கபட்டுள்ளது ஆக, பின்புற கேமராவைத் தேர்ந்தெடுப்பதற்கு இதை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்

இந்த படங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் மூலம் கசிந்தது என்பதும் மற்றும் கடந்த காலத்தில் மற்ற கசிவுகளோடு இது சிறப்பான வண்ணம் பொருந்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்பக்கம்

பின்பக்கம்

சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில் முன்பக்கம் டிஸ்பிளேவின் கீழ் அமைந்துள்ள ஹோம் பொத்தான் மிகவும் சாதாரண தெரிகிறது. எனினும், சாதனத்தின் பின்பக்கம் தான் மிகவும் சுவாரஸ்யமான பகுதியாகும் என்பதால் இதுபற்றிய வருத்தம் அதிகம் தேவையிருக்காது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

மேலும் இந்த சாதனம் அதன் இரண்டாம் டிஸ்பிளேவுடன் கூடிய இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பிரஷ்டு அலுமினிய வடிவமைப்பு கொண்டிருப்பதுபோல் தோன்றும் இந்த சாதனத்தின் முழு அமைப்பும் சாதனத்தின் ஒரு பக்கத்தையே நோக்கி அமைந்துள்ளது என்பது வெளிப்படை.

சிப்செட்

சிப்செட்

மேலும் இதுவரை வெளியான தகவல்களின் கீழ் இந்த தொலைபேசி 5.2 அங்குல முதன்மை டிஸ்பிளே முழு எச்டி தீர்மானம் கொண்டதாக இருக்கலாம் மற்றும் மீடியா டெக் ஹீலியோ எக்ஸ்30 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

ரேம்

ரேம்

128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் போன்ற உயர் இறுதி அம்சங்களும் இந்த சாதனத்தில் அடங்கலாம். கேமரா துறையை பொறுத்தமட்டில் இரண்டு 12எம்பி சோனி சென்சார்களும், முன்பக்கம் 16எம்பி செல்பீ கேமராவும் இடம் பெறலாம்.

விலை

விலை

கிட்டத்தட்ட இதேபோன்ற அம்சங்களுடன் ஆனால் 5.5 இன்ச் என்ற பெரிய டிஸ்பிளேவுடன் மெய்ஸூ ப்ரோ7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. மெய்ஸூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ப்ரோ 7 ஆனது சுமார் ரூ.26,600/- மற்றும் ப்ரோ 7 ப்ளஸ் ஆனது சுமார் ரூ.36,200/- என்ற புள்ளி வரை செல்லலாம்.

Best Mobiles in India

English summary
Meizu teases its dual-screened Pro 7 smartphone, will be unveiled on July 26. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X