புதிய மெய்ஸீ ப்ரோ 7 மற்றும் 7பிளஸ் சிறப்பம்சங்கள் என்ன?
ஸீ ப்ரோ 7 மற்றும் புரோ 7 பிளஸ் ஆகியன பின்னால் இருக்கும் இரட்டை கேமராவில் அருமையாக செயல்படும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.!
சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்த ஸ்மார்ட்போன்களின் திரை மிகவும் அழகாக உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் முக்கிய சிற்பம்சங்களைப் பார்ப்போம்.

மெய்ஸீ ப்ரோ 7 மற்றும் புரோ 7 பிளஸ் ஆகியன பின்னால் இருக்கும் இரட்டை கேமராவில் அருமையாக செயல்படும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் எல்இடி ப்ளாஷ் இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.
மெய்ஸீ ப்ரோ 7 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, மெய்ஸீ ப்ரோ 7பிளஸ் பொருத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 1080 வீடியோ பிக்சல் கொண்டவை.
மெய்ஸீ ஸ்மார்ட்போன்கள் 4மற்றும் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, 64ஜிபி மெமரி விரை இதனுள் அடக்கம், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் இயங்குகிறது. 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இதனுள் அடக்கம்.
உலக மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications