Home
Mobile

இரண்டாம் நிலை டிஸ்பிளேவுடன் மெய்ஸூ ப்ரோ 7.!

மெய்ஸூ ப்ரோ 7 ஆனது இரண்டு மாறுபட்ட மாறுபாடுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

ப்ளேபுல்ராய்டு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி சீனாவில் தேவையானமெய்ஸூ போர் 7 சாதனமானது தேவையான 3சி சான்றிதழைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடன் கருவி சார்ந்த குறிப்புகள் மற்றும் விலையிடல் விவரங்களும் இணைந்து பட்டியலிடப்பட்டுள்ள மெய்ஸூ ப்ரோ 7 ஆனது வெளியீடு மூலையில் உள்ளது என்பதையும் குறிக்கிறது.

இரண்டாம் நிலை டிஸ்பிளேவுடன் மெய்ஸூ ப்ரோ 7.!

ஸ்மார்ட்போன் மாடல் எண் எம்792சி மற்றும் எம்792க்யூ என்ற பெயரின்கீழ் தேவையான 3சி சான்றிதழை இக்கருவிகள் பெற்றுள்ளது. இதன்கீழ் மெய்ஸூ ப்ரோ 7 ஆனது இரண்டு மாறுபட்ட மாறுபாடுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3சி சான்றிதழ் பட்டியலின் படி, தொலைபேசி நிலையான 5வி /3ஏ மற்றும் 12வி/2ஏ சார்ஜிங் கொண்டு வருகிறது, எனவே இதில் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இல்லை என்பதும் இது ஒரு டிடி-எல்டிஇ (TD -LTE) மாறுபாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், மெய்ஸூ ப்ரோ 7 சாதனத்தின் பின்புற படம் லீக் ஆனது அதன் அடிப்படையில் அக்கருவி ஒரு இரண்டாம் நிலை டிஸ்பிளே கூடிய சாதனம் என்று தெரியவந்தது. சாதனத்தின் பின்புறத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பும் காணப்பட்டது. இரண்டாம் நிலை திரையானது தேதி, நேரம், எச்சரிக்கைகள் மற்றும் பிற அறிவிப்புகளை காட்டுகிறது. பின்னால் உள்ள இரண்டாவது காட்சி மிகவும் சிறியது மற்றும் அறிவிப்புகளைக் காண ஒவ்வொரு தடவையும் திரையை டர்ன் ஆன் வேண்டிய அவசியமின்றி, உங்களுக்கு அறிவிப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் வதந்திகளின் படி, மெய்ஸூ ப்ரோ 7 ஸ்மார்ட்போனில் 5.2 க்யூஎச்டி (2560 x 1440) டிஸ்பிளே இடம்பெறும். அது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான ப்ளைமீ ஓஎஸ் (Flyme OS) கொண்டு இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி உள் சேமிப்பு கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாம் நிலை டிஸ்பிளேவுடன் மெய்ஸூ ப்ரோ 7.!

தற்போது வெளியான அறிக்கை இருக்காது என்று கூறினாலும் முன்னர் வெளியான தகவல்கள் மெய்ஸூ எம்சார்ஜ் பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடனான 3000எம்ஏஎச் / 3500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் எக்சிநோஸ் 8895 64-பிட் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது சோனி ஐஎம்எக்ஸ்386 சிமோஸ் சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும் கொண்டிருக் வேண்டும். அது மட்டுமின்றி எம்எக்ஸ்7 கருவியை போலவே இந்த ப்ரோ 7 கருவியும் 3டி டச் அம்சத்தை ஆதரிக்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை,மெய்ஸூ ப்ரோ 7ஆனது 3,499 யுவான் மற்றும் 3,799 யுவான் என்ற விலையில் வெளிவரலாம் என்று வதந்திகள் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Meizu Pro 7 passes 3C certification in China. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X