ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை பெறும் மெய்சூ ஸ்மார்ட்போன்கள்!

ஆம்! மெய்சூ எம்எக்ஸ் மற்றும் எம்-9 ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்கிரேட் வசதியினை வழங்கும். இந்த இயங்குதளத்தின் மூலம் அதிக தொழில் நுட்பத்தினை எளிதாக பயன்படுத்த முடியும்.
இங்கு கூறப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அப்கிரேட் வசதியினை பெறலாம் என்பதோடு, இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரத்தினையும் ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம்.
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்விட்ச ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் மெய்சூ எம்எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1,400 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரின் மூலம் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்கும். மெய்சூ எம்-9 ஸ்மார்ட்போன் 1,000 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3.6 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இந்த திரை வசதியின் மூலம் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும்.
மெய்சூ எம்எக்ஸ் ஸ்மார்ட்போனும் 640 X 960 பிக்ஸல் திரை துல்லியத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் 4.0 அகன்ற திரையினை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் அனைவரையும் முதல் பார்வையிலேயே கவரும் வகையில் சிறப்பான வடிவமைப்பை கொண்டது என்று சொல்லலாம்.
கேரா வசதியிலும் எக்எக்ஸ் ஸ்மார்ட்போன், எம்-9 ஸ்மார்ட்போனை மிஞ்சுகிறது. எம்-9 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. எம்எக்ஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த புகைப்படத்திற்கும், வீடியோ ரெக்கார்டிங் வசதிக்கும் அருமையாக சப்போர்ட் செய்யும்.
சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த 2 ஸ்மார்ட்போன்களும், ஆன்ட்ராய்டு 4.0 அப்கிரேடு வசதியினை வழங்குவதால், இன்னும் சிறப்பான வசதிகளையும் பெற முடியும். இந்த அப்கிரேட் வசதி வருகிற ஜூன் மாதம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
