Home
Mobile

ரெட்மீ 5-ஐ விட மலிவான விலை; டூயல் கேம்; பேசாமல் இதை வாங்கலாமே.!

மெய்ஸூ நிறுவனம், பட்ஜெட் பிரிவில் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

"என்னது பட்ஜெட் விலைக்கு பெயர் போன சியோமி ரெட்மீ வரிசையில் மேலுமொரு ஸ்மார்ட்போனா.?" என்று ஷாக் ஆன கூட்டம், இப்போது "என்னது ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை விட மலிவான விலையில் ஒரு டூயல் கேம் கொண்ட ஸ்மார்ட்போனா.?" என்று ஷாக் ஆகி கொண்டிருக்கிறது.

ரெட்மீ 5-ஐ விட மலிவான விலை; டூயல் கேம்; பேசாமல் இதை வாங்கலாமே.!

ஆம் மெய்ஸூ நிறுவனம், பட்ஜெட் பிரிவில் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மெய்ஸூ எம்6டி என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஒரு மீடியா டெக் சிப்செட் கொண்டு இயங்குகிறது மற்றும் அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்.?

விலை நிர்ணயம்.?

அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன், இதே மாதிரியான ஒரு விலைப்புள்ளியில் கிடைக்கும் பிரபலமான சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை, கூடுதல் அம்சத்துடன் (டூயல் கேம்) நேரடியாக எதிர்க்கிறது. சுமார் 150 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைப்புள்ளியின் கீழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.10,000/-ஐ சுற்றிய ஒரு விலையின் கீழ் விற்பனைக்கு வரும்.

ரெட்மீ 5 உடன் போட்டியிடுமா.?

ரெட்மீ 5 உடன் போட்டியிடுமா.?

விலை நிர்ணயத்தில் மட்டுமின்றி, இதர அம்சங்களிலும் இது சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் உடன் போட்டியிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் ரெட்மீ 5-ஐ போட்டியில் இருந்து விலகி நிற்க வைக்கும் வண்ணம் ஒரு சில பிரதான அம்சங்களையும், மெய்ஸூ எம்6டி கொண்டிருக்கிறது. அவைகள் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்.

என்னென்ன சேமிப்பு மாடல்கள்.?

என்னென்ன சேமிப்பு மாடல்கள்.?

மெய்ஸூ எம்6டி ஆனது மீடியா டெக் MT6750 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. போட்டியாளரான சியோமி ரெட்மீ 5 ஆனது எஸ்டி450 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இருந்தாலும் கூட, ,மெய்ஸூ எம்6டி ஆனது அதன் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிப்செட்டைதான் கொண்டுள்ளது. மொத்தம் மூன்று சேமிப்பு வகைகளில் - 3ஜிபி ரேம் + 32 ஜிபி, 4 ஜிபி ரேம் + 32 ஜிபி, மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - அறிவிக்கப்படலாம்.

வடிவமைப்பு எப்படி.?

வடிவமைப்பு எப்படி.?

மலிவு விலை காரணமாக, பாலிகார்பனேட் உடலமைப்பை கொண்டுள்ளது, ஒரு லோ-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் ஸ்மார்ட்போனின் மையத்தில் செங்குத்தான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கேமராவின் கீழ்ப்பாக்கத்தில் ப்ளாஷ் மற்றும் கைரேகை சென்சார் உட்பொதிக்கப்ட்டுள்ளது.

என்னென்ன வண்ண மாறுபாட்டில் வெளியாகும்.?

என்னென்ன வண்ண மாறுபாட்டில் வெளியாகும்.?

கேமராவின் கீழே வைக்கப்படும் கைரேகை சென்சார் கொண்டு வெளியாகும் முதல் மெய்ஸூ ஸ்மார்ட்போன் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, எம்6டி ஒரு சிறப்பான பட்ஜெட் ஸ்மார்ட்போனாகவும் உடன் ரெட்மீ 5-க்கு சரியான போட்டியாகவும் இருக்கும். அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் மட்டுமின்றி, வண்ண மாறுபாடுகளிலும் சியோமிக்கு (கிட்டதட்ட) சமமாக மொத்தம் மூன்று வண்ண விருப்பங்கள் மெய்ஸூ வெளியாகும் : பிளாக், ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ரெட்.!

டிஸ்பிளேவை பற்றிய விவரங்கள்.?

டிஸ்பிளேவை பற்றிய விவரங்கள்.?

இதர அம்சங்களை பொறுத்தவரை, மெய்ஸூ எம்6டி ஆனது 5.7 இன்ச் எச்டி+ அளவிலான 1440 x 720பி என்கிற தீர்மானம் கொண்ட, சமீபத்திய 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த பாணியின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், இது மலிவான விலையில் உடன் டூயல் கேமரா அமைப்புடன் வெளியாகிறது.

ரெட்மீ 5-ஐ விட சிறந்த கேமரா கொண்டிருக்குமா.?

ரெட்மீ 5-ஐ விட சிறந்த கேமரா கொண்டிருக்குமா.?

கேமரா அமைப்பானது 13 எம்பி + 2 எம்பி IMX278 RGBW அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது பொக்கே விளைவுகளை உண்டாக்க வல்லது என்பதில் சந்தேகமே வேண்டாம். முன் பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8 எம்பி எப் / 2.0 செல்பீ கேமராவை கொண்டுள்ளது. அது ஆர்க்சாப்ட் பியூட்டி அல்காரிதம்களை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த, எம்6டி ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பை விட சிறந்ததாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6T Takes On The Redmi 5 With Dual Cameras. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X