விரைவில் : பட்ஜெட் விலையில் கிடைக்கும் மீஸு எம்6எஸ்.!
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீஸு எம்6எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 20-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது மீஸு நிறுவனம். மேலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என்று மீஸு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போன்.

மீஸு எம்6எஸ் :
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மீஸு எம்6எஸ்
ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9.767-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications