அசத்தலான மீஸு எம்6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை இப்போது கசிந்துள்ளது. ரூ.24,253-என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
மீஸு நிறுவனம் டிசம்பர் 20-ம் தேதி மீஸு எம்6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டது, ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு துவகத்தில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மீஸு நிறுவனம்.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை இப்போது கசிந்துள்ளது. ரூ.24,253-என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மீஸு எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications