அறிமுகம் : ஆகஸ்ட் 23-ல் மெய்ஸூ எம்6 நோட் (அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பார்க்கும்போது இக்கருவி மாலி- டி880 ஜிபியூ உடன் இணைந்த ஒரு மீடியா டெக் ஹீலியோ பி25 செயலி கொண்டு தொடங்க வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான பத்திரிகை அழைப்பிதழ்களை மெய்ஸூ நிறுவனம் அனுப்பத்தொடங்கியுள்ளது. பெய்ஜிங் செயற்பாட்டு கலை மையத்தில் 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வு சார்ந்த தகவலை விபோ வலைத்தளத்தில் இருந்து பெற்றுள்ளோம்.

இந்த நிகழ்வில், நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மெய்ஸூ எம்6 நோட் சாதனம் அறிமுகமாகும் என்பதை வெளியான அழைப்பில் தெளிவாக உள்ளது. "ட்ரூ ஸ்டே (True Stay)" என்று கூறும் இந்த பத்திரிகை அழைப்பிதழ் குறிப்பிடும் சாதனத்தின் அம்சங்கள் இரண்டு முறை மட்டுமே ஆன்லைன் மேல்தளத்தில் கசிந்துள்ளது.

மெய்ஸூ எம்6 நோட்
நேற்று, அதன் முக்கிய குறிப்புகள் மற்றும் அம்சங்களை சிலவற்றை வெளிப்படுத்தும் ஒரு லீக்ஸ் புகைப்படம் வெளியானது என்பதும் அந்த லீக்ஸ் மெய்ஸூ எம்6 நோட் ஆனது செப்டம்பர் மாதம் வெளியாகுமென்று கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீடியா டெக் ஹீலியோ பி25 செயலி
எவ்வாறாயினும், இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பார்க்கும்போது இக்கருவி மாலி- டி880 ஜிபியூ உடன் இணைந்த ஒரு மீடியா டெக் ஹீலியோ பி25 செயலி கொண்டு தொடங்க வாய்ப்பு உள்ளது.

சேமிப்புத்திறன்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இயல்புநிலை சேமிப்புத்திறன் கொண்ட அடிப்படை பதிப்பு மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்புத்திறன் என இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நினைவக மாறுபாடுகளிலும் வெளியாகலாம்.

4000எம்ஏஎச் பேட்டரி
ஒரு பெரிய அளவிலான 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் மெய்ஸூ எம்6 நோட் ஆனது ஒரு 5.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார்
இதன் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சியோமி ரெட்மீ ப்ரோ போன்றே இக்கருவியில் ஒரு சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறலாம். மேலும் கசிவு மூலம் இது ஒருவேளை உலோக யூனிபாடி வடிவமைப்பையும் பெறலாம்.

ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம்
அம்சங்களை வைத்து பார்க்கும்போது மெய்ஸூ எம்6 நோட் ஆனது ஒரு மிட்-ரேன்ஜ் ஆண்ட் ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் மற்றும் சியோமி லெனோவா மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களுடன் போட்டிபோடும் வண்ணம் ரூ.15,000/- என்ற விலை நிர்ணயத்தை இந்திய சந்தையில் பெறலாம்.


Click it and Unblock the Notifications