மியூசூ U10 மற்றும் மியூசூ U20 மாடல்களில் உள்ள 6 சிறப்பு அம்சங்கள்
ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் சியாமி நிறுவனத்தை போலவே மியூசூ(Meizu) நிறுவனமும் இரண்டு புதிய மாடல்கள் விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது.. அவை மியூசூ U10 மற்றும் மியூசூ U20.

மேற்கண்ட இரண்டு மாடல்களுமே அழகிய மெட்டல் பாடியுடன் இரண்டு பக்கமும் கண்ணாடியினால் கவர் செய்யப்பட்டுள்ளது.
இலவச ஜியோ 4ஜி சிம் பெற, நீங்கள் செய்ய வேண்டிய 2 விடயங்கள்..!
இரண்டு மாடல்களும் $200 ரேஞ்சில் விலையாக அமைந்திருந்தாலும் இந்த விலைக்கு அதிக ஆப்ஷன்கள் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.
கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்
இனி இந்த பாடல்களில் என்னென்ன புது ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

டிசைனும் டிஸ்ப்ளேவும்
ஒரு ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கியம் டிசைனும் டிஸ்ப்ளேவும்தான். இது இரண்டுமே இந்த மாடலில் செவ்வனே அமைந்துள்ளது. ஏற்கனவே கூறியபடி மெட்டல் பாடியுடன் கூடிய கண்ணாடி பேனல் உள்ளது. மேலும் மியூசூ U10 5 இன்ச் டிஸ்ப்ளேவுடனும் மியூசூ U20 மாடலில் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் உள்ளது மேலும் இந்த மாடலில் 1080P டிஸ்ப்ளே ரெசலூசன் உள்ளது. மேலும் இந்த மொபைலின் பாதுகாப்பிற்காக ஃபிங்கர் பிரிண்ட் ஆப்சன் உள்ளது.

இரண்டுக்கும் ஒன்றுதாம்ப்பா!!!
மியூசூ U10 மற்றும் மியூசூ U20 ஆகிய இரண்டு மாடல்களுக்குமே ஒரே ஆக்டோ கோர் சிப்செட்-ஐ கொண்டுள்ளது. ஆனால் சிப்செட் குறித்த மேல்விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இரண்டு மாடல்களும் 2ஜிப் ரேம்/16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம்/16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரவுள்ளது.

கேமராவும் ஒரே மாதிரிதானா!!
மியூசூ U10 மற்றும் மியூசூ U20 ஆகிய இரண்டு மாடல்களிலும் 13எம்பி பின்கேமிராவும் 5 எம்பி முன்கேமிராவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்கேமிராவில் PDAF மற்றும் LED பிளாஷ் வசதி உள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற வசதிகள் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?
மியூசூ U10 மற்றும் மியூசூ U20 ஆகிய இரண்டு மாடல்களிலும் 4G LTE, 3G, டூயல் ஹைப்ரி சிம், வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ USB ஆகிய வசதிகள் இருப்பதால் வாடிக்கையாளர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியூசூ U20 மாடலின் பேட்டரி எப்படி?
மியூசூ U10 மாடலில் 2,760mAh பேட்டரியும், மியூசூ U20 மாடலில் 3,260mAh பேட்டரியும் உள்ளதால் சார்ஜ் குறித்த கவலை இல்லை.

அதெல்லாம் சரி, இது என்ன விலை?
2GB RAM/16GB ஸ்டோரேஜ் உள்ள மியூசூ U10 மாடல் சுமார் ரூ. 10,000 என்றும் 3GB RAM/32GB ஸ்டோரேஜ் உள்ள மியூசூ U20 மாடல் ரூ.11,500 என்றும் கம்பெனி விளம்பரப்படுத்தி உள்ளது. மேலும் மியூசூ U10 மாடல் வரும் செப்டம்பர் 18 முதல் சீன சந்தையிலும், ஆன்லைன் சந்தையிலும் கிடைக்கும். அதேபோல் மியூசூ U20 மாடல் ஆகஸ்ட் 28 முதல் ஆன்லைன் சந்தையிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications