ஜனவரி 4 : அசத்தலான மெய்ஸூ எம்6எஸ் சாதனம் அறிமுகம்.!
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த மெய்ஸூ எம்6எஸ் சாதனத்தை வரும் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மெய்ஸூ நிறுவனம், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 18:9என்ற திரை விகிதம் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா :
இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2930எம்ஏஎச்:
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 2930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.24.253-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications