Home
Mobile

நீயெல்லாம் எனக்கு போட்டியா.? ரெட்மீ நோட் 5-க்கு வந்த சத்திய சோதனை.!

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கான போட்டி என்பதால் மெய்ஸூ இ3 ஆனது எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையை எட்டலாம்.

By Muthuraj

நீண்ட கால வதந்திகளுக்கு பின்னர் மெய்ஸூ நிறுவனம், ஒருவழியாக அதன் மெய்ஸூ இ3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக வெளியான (இன்று கூட இந்திய விற்பனை நிகழ்த்திய) சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் சாதனமான ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனுக்கு கடும் போட்டியை உண்டாக்கும் என்பது போல் தெரிகிறது.

ஏனெனில், மெய்ஸூ இ3 ஆனது ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை அப்படியே தன்னுள் கொண்டுள்ளது. மெய்ஸூ நிறுவனத்தின் பல கருவிகளை (லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினைகள் காரணமாக) போலவே இக்கருவியின் இந்திய விற்பனை பற்றிய வார்த்தைகளும் கிடையாது. இருப்பினும் கூட ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கான போட்டி என்பதால் மெய்ஸூ இ3 ஆனது எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையை எட்டலாம்.

கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ.!

கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ.!

அம்சங்களை பொறுத்தமட்டில், 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே மற்றும் ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது, இந்த சாதனம் மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில் - கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ - வாங்க கிடைக்கும். வெளியான மூன்று மாறுபாடுகளில் ப்ளூ நிற மாறுபாடு மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுகிறது.

மிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும்.!

மிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும்.!

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், மெய்ஸூ இ3 ஆனது 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 திரை விகிதம் கொண்ட ஒரு 5.99 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளதுமற்றும் ரெட்மீ நோட் 5 போன்றே, ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி-க்கு அடுத்த இடத்தில் உள்ள சிப்செட் கொண்டு, மிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் மெய்ஸூ இ3 கருவியும் இணைந்துள்ளது.

256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கம்.!

256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கம்.!

64 ஜிபி மற்றும் 128 ஜிபி இடையே மாறுபடும் உள்ளடக்க சேமிப்பு திறனுடன் கூடிய 6 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. இக்கருவியின் 4ஜிபி ரேம் மாறுபாடு சார்ந்த விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்த இடத்தில் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது 3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மாறுபாடுகளில் கிடைக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாக்க சேமிப்பு தவிர்த்து மெய்ஸூ இ 3 ஆனது 256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றும் கொண்டுள்ளது.

16எம்பி செல்பீ கேமரா.!

16எம்பி செல்பீ கேமரா.!

மெய்ஸூ இ3 ஆனது ரெட்மீ நோட் 5 போன்றே ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஒரு 20எம்பி முதன்மை சென்சார் மற்றும் ஒரு 12எம்பி இரண்டாம்நிலை சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், பொக்கே விளைவுகளுடன் கூடிய படங்களை பதிவு செய்யும் திறன் கொண்ட ஒரு 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

3360எம்ஏஎச் பேட்டரி.!

3360எம்ஏஎச் பேட்டரி.!

இக்கருவியின் கைரேகை ஸ்கேனர் ஆனது, பவர் பொத்தானின் உள்ளே பொதிக்கப்பட்டுள்ளது. இது தொலைபேசியின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த சாதனமானது, பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3360எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த தொலைபேசியானது ஒரு 20வாட் சார்ஜர் உடன் ஷிப்பிங் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையிலான ஃப்ளைம் ஓஎஸ் 7 கொண்டு இயக்குகிறது மற்றும் அலிபே வழியிலான பணபரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாறுபட்டது சுமார் ரூ.18,480/-க்கும் மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடுனது சுமார் ரூ.20,530/-கு விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Meizu E3 With Snapdragon 636 SoC, 6GB of RAM Launched to Compete With Redmi Note 5. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X